மைக்ரோசொப்ட் நிறுவனம் மெட்ரோ பயனர் இடைமுகத்துடன் அறிமுகப்படுத்தியிருந்த Windows 8 இயங்குதளமானது தற்போது 200 மில்லியன் கொப்பிகள் விற்பனையாகியுள்ளன.
விண்டோஸ் 7 இயங்குதள விற்பனையை விடவும் மந்தமான வேகத்திலேயே விற்பனை இடம்பெற்ற போதிலும் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் 6 மாதங்களில் 100 மில்லியன் கொப்பிகளையும், அதன் பின்னரான 6 மாதங்களில் 100 மில்லியன் கொப்பிகளையும் விற்பனை செய்துள்ளது.
எனினும் விண்டோஸ் 7 இயங்குதளமானது ஒரு வருட காலப்பகுதியில் 240 மில்லியன் கொப்பிகள் விற்பனையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தற்போது எதிர்வரும் 2015ம் ஆண்டில் அறிமுகம் செய்வதற்காக விண்டோஸ் 9 இயங்குதள வடிவமைப்பில் மைக்ரோசொப்ட் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.
0 comments:
Post a Comment