Saturday, 15 February 2014

ஃபயர்ஃபாக்ஸில் விளம்பரங்கள்

புகழ் பெற்ற மோஸில்லா ஃபயர்ஃபாக்ஸ் ப்ரௌஸரில் விளம்பரங்கள் நுழையவுள்ளன.
ஃபயர்ஃபாக்ஸுக்கு இது ஒரு மிகப் பெரிய மாற்றம். தற்போது நீங்கள் இந்த ப்ரௌஸரைத் திறந்தால் 9 Tiles (நீங்கள் அடிக்கடி பார்க்கும் இணையத் தளங்கள்) காண்பிக்கப்படும். ஒருவேளை நீங்கள் புதிதாக இந்த ப்ரௌஸருக்கு வந்துள்ளீர்கள் என்றால், அந்த டைல்கள் வெறுமையாக இருக்கும்.
இனிமேல், அந்தக் காலி இடங்களில் “Directory Tiles” இடம்பெறும். இவை மோஸில்லா நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட இணையத் தள முகவரிகளைக் கொண்டிருக்கும். அவற்றுள் விளம்பரங்களும் இடம்பெறலாம்.
‘பெரும்பாலான டைல்கள் மோஸில்லா சார்ந்தவை, அந்தப் பயனாளர் வசிக்கும் இடத்துக்கேற்ற முக்கியத்துவம் கொண்ட இணையத் தளங்களைக் கொண்டவை’ என்கிறார் Mozilla Content Services துணைத் தலைவர் டாரென் ஹெர்மன். ‘இவற்றில் சில, எங்களுடைய பார்ட்னர்களின் இணையத் தளங்களுடைய விளம்பரங்களாக இருக்கும்! அவற்றை நாங்கள் தெளிவாக Sponsored என்று குறிப்பிட்டுவிடுவோம்!’
ஒரே பிரச்னை, பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்கள், பாதுகாப்பு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தந்துவந்த மோஸில்லா நிறுவனம், இப்படித் திடீரென்று விளம்பரங்களில் கவனம் செலுத்தலாமா? அவற்றின்மூலம் வைரஸ் பரவினால் யார் பொறுப்பு? இவற்றைக் கொண்டு ஒருவர் வசிக்கும் இடத்தை விளம்பரதாரர்கள் தெரிந்துகொண்டால் அது மோஸில்லாவின் அடிப்படை நோக்கத்துக்கே எதிராகிவிடுமல்லவா?
இதுவரை விளம்பரதாரர்கள் அனைவரும் ‘ஃபயர்ஃபாக்ஸ் எங்களை முடக்கப்பார்க்கிறது’ என்று வருத்தத்தில் இருந்தார்கள். இப்போது, அவர்களுக்கு நேசக் கரம் கொடுக்கிறது மோஸில்லா.
இதற்கு இன்னொரு காரணம், தற்போது மோஸில்லாவின் பெரும்பான்மை வருமானம் கூகுளிடமிருந்து வருகிறது. பதிலுக்கு அவர்கள் ஃபயர்ஃபாக்ஸ் ப்ரௌஸரில் கூகுளை Default Search Engineஆக வைத்துள்ளார்கள்.
இப்படி ஒரே நிறுவனத்தை நம்பியிருக்காமல், விளம்பரங்களின்மூலம் பணம் திரட்டலாமே என்று நினைக்கிறது மோஸில்லா. அதனால் புதுப் பிரச்ம்னைகள் எவையும் வராமல் இருந்தால் சரி.

0 comments:

Post a Comment