Monday, 10 February 2014

வேலை வேணுமா? தொழில்நுட்பம் துணை நிற்கும்!

இந்தியத் தொழில்நுட்பத் துறையில் சேவைத்துறை நிறுவனங்கள்தான் அதிகம் இருந்துவந்தன. இதனால் இந்தியா உலகின் outsourcing capital என்று பெயர் எடுத்தது.
ஆனால் இன்றைக்கு, பலர் இங்கே சொந்தத் தொழில் தொடங்குகிறார்கள். இந்தியாவுக்கும் உலகுக்குமான தீர்வுகளை இங்கிருந்தே எழுதுகிறார்கள்.
ஆனால், அது ஒன்றுதான் இவர்களது நோக்கமா?
இல்லை, சிலருக்குச் சமூக சேவை எண்ணமும் உண்டு. உதாரணமாக Sean Blagsvedt என்பவர் இந்தியாவில் மைக்ரோசாஃப்ட் ஆய்வு மையத்தை உருவாக்க வந்தார். மூன்று வருடங்கள் கழித்து, Babajob என்ற பெயரில் ஒரு தளத்தை உருவாக்கி, வேலை வேண்டும் இந்தியர்களுக்கு உதவுகிறார்!
அதற்குதான் பல தளங்கள் இருக்கின்றனவே என்கிறீர்களா?
ஒரு வித்தியாசம், இங்கே வேலை தேடுவது டிரைவர்கள், நர்ஸ்கள், சமையல்காரர்கள்… இவர்களுக்கு இணையம்பற்றித் தெரியவேண்டியதில்லை, கம்ப்யூட்டர்கூட இருக்கவேண்டியதில்லை, ஃபோனில் இருந்தபடி Babajobமூலம் வேலை தேடலாம்.
‘இதுவரை இருபது லட்சம் பேர் எங்களுடைய தளத்தின்மூலம் சிறந்த வேலை பெற்றுள்ளார்கள்’ என்கிறார் Sean Blagsvedt, ‘இந்த எண்ணிக்கையைப் பத்து கோடியாக உயர்த்துவதுதான் எங்களுடைய லட்சியம்!’

0 comments:

Post a Comment