Tuesday, 4 February 2014

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாகி சத்ய நாடெல்லா

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாகி சத்ய நாடெல்லா

சத்ய நாடெல்லா




நியூயார்க்: உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மாற்றப்பட உள்ளார். இதுவரை அப்பதவியில் இருந்த ஸ்டீவ் பால்மருக்கு பதிலாக இந்தியாவில், ஹைதெராபாத்தில் பிறந்த சத்ய நாடெல்லா (47) விரைவில் அடுத்த தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நாடெல்லா, 1992ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்தார், மைக்ரோசாப்ட் கிளவுட் மற்றும் என்டர்ப்ரைஸ் குழு நிர்வாக துணை தலைவராக இருந்தார். நிறுவனத்தில் கம்ப்யூட்டிங் ப்ளட்ஃபார்ம்ஸ்(Platforms), டெவலப்பர் டூல்ஸ் மற்றும் க்ளவுட் சர்வீசஸ் ஆகியவற்றை உருவாக்கவும் மற்றும் இயங்கவு-ம் பொறுப்பேற்றுள்ளார்.

கார்ட்னர் படி, கார்ப்பரேட் கிளவுட் சர்வீஸ் சந்தையில் கடந்த 2013ம் ஆண்டில் $ 9 பில்லியனில் இருந்து 2014ம் நிதி ஆண்டில் 45% உயர்ந்து $ 13 பில்லியன் வளர்ச்சி அடையும். ஆய்வாளர்களின் கருத்துப்படி, மைக்ரோசாப்ட் இல் கிளவுட் குரு என்ற நாடெல்லா கடந்த சில ஆண்டுகளில் மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளார்.

நாடெல்லா மற்றும் அவரது குழுவினர் 'கிளவுட் ஓஎஸ்' வழங்குகின்றனர், மைக்ரோசாப்ட்டின் அடுத்த தலைமுறை பேக்என்ட் ப்ளட்ஃபார்ம் 'கிளவுட் ஓஎஸ்' (ஓ365, பிங், ஸ்கை ட்ரைவ், எக்ஸ்பாக்ஸ் லைவ், ஸ்கைப் மற்றும் டைனமிக்ஸ் உள்ளிட்ட) அனைத்து மைக்ரோசாப்ட்டின் இண்டர்நெட் ஸ்கேல் க்ளவுட் சர்வீசஸ்க்கு அதிகாரங்களை வழங்குவது மட்டுமில்லாமல், விண்டோஸ் Azure, விண்டோஸ் சர்வர், SQL சர்வர், விஷுவல் ஸ்டுடியோ மற்றும் சிஸ்டம் சென்டர் உட்பட, கிளவுட் ஓஎஸ் ல் உருவாக்கும் வர்த்தக தயாரிப்புகளின் எல்லா இடங்களிலும்  வழங்குகிறது.

நாடெல்லா, சாதனங்கள் மற்றும் சாஃப்ட்வேர் சேவைகளை உருவாக்கும் அடிப்படைகளை உள்ளடக்கிய, எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பிஸ்னஸ் பட்டங்களை கொண்டுள்ளார். ஹைதெராபாத்தில் பிறந்த நாடெல்லா, இந்தியாவில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் இளங்கலை பட்டம் பெற்றார் மற்றும் மங்களூர் பல்கலைக்கழகம் மற்றும் மணிப்பால் இன்ஸ்டிடியூட் தொழில்நுட்பம் நிறுவனத்தில் சேர்ந்து பட்டபடிப்பை முடித்தார். அவர் மில்வாக்கி, விஸ்கான் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதுகலை பட்டம் பெற்றார் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் இருந்து பிஸ்னஸ் அட்மினிஸ்ட்ரேஷன் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். 

0 comments:

Post a Comment