Monday, 10 February 2014

Simplify360யை வாங்கப்போவது யார்?

இந்திய டிஜிட்டல் மீடியா வட்டாரங்களில் லேட்டஸ்ட் பரபரப்பு, Simplify360யை வாங்கப்போவது எந்த நிறுவனம்? ட்விட்டர், அடோப், WPP என்று பல பெயர்கள் இதில் அடிபடுகின்றன!
 Simplify360யின் தயாரிப்புகளை ரெவ்லான், டார்கெட், விப்ரோ உள்ளிட்ட பல நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. சோஷியல் மீடியா விவரங்களை அலசும் மென்பொருள்கள் இவை.
‘நாங்கள் சில நிறுவனங்களுடன் பேசிவருவது உண்மைதான்’ என்றார் Simplify360 தலைவர் பூபேந்திர கனால், ‘ஆனால் எதுவும் நிச்சயமாகத் தெரியாததால், இப்போதைக்கு எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை! நீங்கள் சொல்வதை ஏற்கவோ, மறுக்கவோ என்னால் இயலாது!’
Simplify360யுடன் அடோப் பேசிவருவதாக சோஷியல் சமோசா என்ற வலைப்பதிவு சொல்கிறது. ட்விட்டர், ஃபேஸ்புக், மற்ற சோஷியல் மீடியாத் தளங்களிலிருந்து விவரங்களைத் திரட்டும் இந்நிறுவனத்தின்மீது பலருக்கு விருப்பம்.
2009ல் தொடங்கப்பட்ட Simplify360 இதுவரை Amvensys Capital செய்த முதலீட்டினால் இயங்கிவந்தது. இதில் 25 பேர் வேலை செய்கிறார்கள். தினமும் அரைக் கோடி சோஷியல் மீடியா குறிப்புகளை ஆராய்ந்து, ஒவ்வொரு வாரமும் 5 டெராபைட் விவரங்களைத் திரட்டி 27 மொழிகளில் வழங்குகிறது.
இதன்மீது பெரிய நிறுவனங்களுக்கு ஏன் அத்தனை ஆர்வம்?
இந்த சோஷியல் மீடியா அலசல்தான் இனிமேல் மிகப் பெரிய பொக்கிஷமாக இருக்கப்போகிறது என்கிறார்கள் நிபுணர்கள். அது யாரிடம் உள்ளதோ அவர்கள்தான் மார்க்கெட்டிங் துறையில் பிஸ்தா!
இந்தத் துறை சார்ந்த Buddy Media என்ற நிறுவனத்தை Salesforce வாங்க, அதன் போட்டியாளரான ஆரக்கிள் Vitrue, Collective Intellect உள்ளிட்ட பல நிறுவனங்களை வாங்கியது. லாபத்தில் இயங்கிவரும் Simplify360யை வாங்கப்போவது யார்?

0 comments:

Post a Comment