சர்வதேச அளவில் ஸ்மார்ட்ஃபோன் என்றாலே ஆண்ட்ராய்ட் என்று பெயரெடுத்துள்ள இந்த ஆபரேட்டிங் சிஸ்டத்தின் ஐந்தாவது வடிவம், விரைவில் வெளியாகிறது!
இந்த வடிவத்தின் பெயர் என்ன? எப்போது வெளியாகும்? அதில் என்னென்ன வசதிகள் இருக்கும்? எதுவும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் இணையத்தில் இதைப்பற்றி ஏகப்பட்ட வதந்திகள். அவற்றுள் முக்கியமானவை, இங்கே:
1. ரிலீஸ் தேதி: இந்த ஆண்டின் மத்தியில், சான் ஃப்ரான்சிஸ்கோ நகரில் கூகுள் நடத்தும் Google IO வருடாந்திர நிகழ்ச்சியில் ஆண்ட்ராய்ட் 5 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2. ஃபோன்கள்: ஆண்ட்ராய்ட் 5 முதலில் நெக்ஸஸ் ஃபோன் அல்லது டாப்லட்டில்தான் அறிமுகமாகும் என்கிறார்கள். அநேகமாக அது HTCயின் டாப்லட்டாக இருக்கும்.
3. சாம்சங் என்ன செய்யும்? ஆண்ட்ராய்ட் என்றாலே பலருக்கு உடனே சாம்சங் என்ற பெயர்தான் நினைவுக்கு வரும். அவர்களுடைய Galaxy S4, Galaxy S3, Galaxy Note 2, Galaxy Note 8.0, Galacy Note 10.1 ஆகியவற்றில் ஆண்ட்ராய்ட் 5 Upgrade செய்யப்படும் என்கிறார்கள்.
4. வசதிகள்: Google Babble (Cross-Platform சேவை & அப்ளிகேஷன், Talk, Hangout, Voice, Messenger, Chat for Google Drive, Chat on Google+ ஆகியவற்றை ஒருங்கிணைக்கும்) இதில் வரும் என்கிறார்கள், அது ஏற்கெனவே வேறு பெயரில் வெளியாகிவிட்டதால், இப்போது அதற்கான வாய்ப்புகள் குறைவு.
5. ஃபிட்னஸ் அப்ளிகேஷன்கள்: இப்போது பலரும் ஸ்மார்ட்ஃபோனை உடல் நலம் காக்கப் பயன்படுத்துகிறார்கள், அது தொடர்பான அப்ளிகேஷன்களை ஆண்ட்ராய்ட் கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது.
6. க்ரோம்: ஆண்ட்ராய்ட் 5 என்ற பெயரில் கூகுள் தனது க்ரோம் ஆபரேட்டிங் சிஸ்டத்தைதான் ஃபோன்களுக்கேற்ப மாற்றி வெளியிடப்போகிறது என்கிறார்கள் சிலர். ஆனால், இதற்கான வாய்ப்புகள் குறைவு.
7. படம் வரைந்து அப்ளிகேஷன்களைத் திற: கூகுள் ஒரு வித்தியாசமான டெக்னாலஜிக்குக் காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளது. இதன்மூலம், லாக் செய்யப்பட்ட ஃபோனில் ஒரு குறிப்பிட்ட Patternஐ வரைந்து, சம்பந்தப்பட்ட அப்ளிகேஷனை நேரடியாகக் கொண்டுவரலாம். உதாரணமாக, வட்டம் போட்டால் கேமெரா, சதுரம் போட்டால் ட்விட்டர்… இப்படி!
ஆண்ட்ராய்ட் 5ல் என்ன இருக்கவேண்டும் என்பதுபற்றிப் பிரபல தொழில்நுட்ப எழுத்தாளர் கேரி கட்லாக் கணிப்புகள் இவை:
1. Performance Profiles: ஒரே ஒரு பொத்தானை அழுத்தினால் நாம் விரும்புகின்ற வகையில் (Silent Mode, Data Off etc.) நம்முடைய ஃபோன் செயல்படவேண்டும்
2. ஒரு பொதுவான வீடியோ சாட் அப்ளிகேஷன்
3. Contactகளில் ஒன்றுக்கு மேற்பட்டோரைத் தேர்ந்தெடுக்கும் வசதி
4. SMSகளை சிம் கார்டிலோ, SD கார்டிலோ, இணையத்திலோ சேமிக்கும் வசதி
5. அப்ளிகேஷன்களின் மாற்றங்களைத் தடுக்கும் “Never Update” என்ற தேர்வு
6. இலவசமாக அப்ளிகேஷன்களை விநியோகிக்க உதவும் Codes
7. Settings Screenல் உள்ள விஷயங்களை அடுக்கிப் பார்க்கும் வசதி
8. பேட்டரி எவ்வளவு சதவிகிதம் தீர்ந்துள்ளது என்ற விவரம் Notifications Barல் காண்பிக்கப்படுதல்
0 comments:
Post a Comment