இன்றைக்கு விண்டோஸ் 8 சிஸ்டம் அறிமுகப்படுத்தியவுடன், மைக்ரோசாப்ட் பழைய சிஸ்டங்களுடன் கம்ப்யூட்டர் வடிவமைப்பவர் களுக்கு, இறுதி நாளினை நிர்ணயம் செய்தது. அதற்குப் பின்னர், அந்நிறுவனங்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் தான், கம்ப்யூட்டர்களை விற்பனை செய்திட வேண்டும் என்பது ஒப்பந்தம். ஆனால், விண்டோஸ் 8 மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது. விண்டோஸ் 7 தொடர்ந்து கம்ப்யூட்டர்களில் மட்டுமின்றி மக்கள் மனதிலும் இடம் பெற்றது. ஆனால், தன் விண்டோஸ் 8.1 மூலம் சிக்கல்களை ஓரளவுக்குத் தீர்த்து வைத்த மைக்ரோசாப்ட், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான இறுதி நாளை அறிவித்தது. பின்னர், அதனை வாபஸ் பெற்றது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான ஒப்பந்தம் மேற்கொண்டு, பெர்சனல் கம்ப்யூட்டர்களையும், லேப்டாப் கம்ப்யூட்டர்களையும் வடிவமைத்து விற்பனை செய்து வரும் ஹ்யூலட் பேக்கார்ட் (எச்.பி.) நிறுவனம், மக்கள் தொடர்ந்து விண்டோஸ் 7 சிஸ்டத்தினையே விரும்புவதால், மீண்டும் விண்டோஸ் 7 சிஸ்டம் பதிக்கப்பட்ட பெர்சனல் கம்ப்யூட்டர்களை வடிவமைத்து வழங்க முன் வந்து வழங்கியும் வருகிறது. விரும்பும் மக்களுக்கு விண்டோஸ் 7 சிஸ்டம் வழங்குகிறோம். விண்டோஸ் 8 சிஸ்டத்தினை கைவிட்டு விடவில்லை. அதனைக் கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு, விண்டோஸ் 8 பதிந்து தருகிறோம் எனவும் அறிவித்துள்ளது. பெர்சனல் கம்ப்யூட்டர் சந்தையில் விற்பனை சரிந்து வருவதால், மைக்ரோசாப்ட் நிறுவனமும், இதனை மிகக் கண்டிப்புடன் கண்டு கொள்ளவில்லை. ஆனால், மீண்டும், விண்டோஸ் 7 சிஸ்டம் வழங்குவதை நிறுத்தச் சொல்லி, மைக்ரோசாப்ட் அறிவுறுத்தும் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
Saturday, 15 February 2014
Home »
» விண்டோஸ் 7 காலம் நீட்டிப்பு
விண்டோஸ் 7 காலம் நீட்டிப்பு
Related Posts:
இ மெயில் இயங்குவது இப்படித்தான்....! இன்றைக்கு ஒரு நிமிடத்தில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மெயில்கள் என்னும் மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. எதுவும் வழி தவறியதில்லை. அனுப்புபவர் சரியான முகவரி தராமல் இருந்தால் ஒழிய, செல்லும் பாதையில் தொடர்புகள் அறுந்து போய்… Read More
Apple may release a large-screen iPhone this year: IDC Apple, which posted its lowest growth in handset sales last year, may release a large-screen version of its iconic iPhone in 2014, research firm IDC said. However, the California-headquartered company will not aband… Read More
வைரஸ் வந்த கம்பியூட்டரை இப்படி செய்யுங்கள்...! நாம் கம்பியூட்டரை பயன்படுத்துகையில் நமக்கே தெரியாமல் சில வைரஸ்கல் நமது கம்பியூட்டருக்குள் வந்துவிடும் இதனால் புதுப்புது பிரச்னைகள் தலை தூக்குகின்றனவா? அப்படியானால், உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ், ஸ்பைவேர் அல்லது வேறு ஏதேனும் ம… Read More
Windows 8 விற்பனையில் சிகரத்தை எட்டியது மைக்ரோசொப்ட் மைக்ரோசொப்ட் நிறுவனம் மெட்ரோ பயனர் இடைமுகத்துடன் அறிமுகப்படுத்தியிருந்த Windows 8 இயங்குதளமானது தற்போது 200 மில்லியன் கொப்பிகள் விற்பனையாகியுள்ளன. விண்டோஸ் 7 இயங்குதள விற்பனையை விடவும் மந்தமான வேகத்திலேயே விற்பனை இடம்பெற்… Read More
Google smartens Android's voice search Google Inc has reportedly retrained voice search in Android in order to let users call family and friends by saying aloud their pet names. Callers can now call their loved ones on the basis of the relationship … Read More
0 comments:
Post a Comment