Monday, 10 February 2014

இந்தியாவில் சிஸ்கோவின் Collaboration தொழில்நுட்பம்

Collaboration தொழில்நுட்பங்களை விரிவுபடுத்தும் முயற்சியில் உள்ள சிஸ்கோ நிறுவனம், அதற்காகத் தேர்ந்தெடுத்துள்ள 15 சந்தைகளில் இந்தியாவும் ஒன்று!
இதற்காக, தனது தொழில்நுட்பங்களை இந்திய மக்களுக்கேற்ப மாற்றி வழங்குகிறது சிஸ்கோ. இதன்மூலம் வெவ்வேறு இடங்களில் உள்ள மக்கள் ஒரே சூழலில் இணைந்து பணியாற்றமுடியும். ஆவண மேலாண்மை, அப்ளிகேஷன்களைப் பகிர்தல், Presentationகளைத் தயாரித்தல், வழங்குதல், whiteboarding, மின் அரட்டை போன்றவை இதில் இடம்பெறும். இதன்மூலம், ஒருவர் எங்கே இருக்கிறார் என்ற கவலை இன்றி பணி நடக்கும்.
Frost & Sullivan ஆய்வு ஒன்று, ‘இவ்விதமான தொடர்பு அப்ளிகேஷன்களுக்கு இந்தியச் சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கும்’ என்கிறது. இதுவே சிஸ்கோவின் ஆர்வத்துக்குக் காரணம் என்று ஊகிக்கலாம்.
‘நாங்கள் 150 நாடுகளில் இயங்குகிறோம். ஆனால் Collaboration துறையைப் பொறுத்தவரை 15 நாடுகளில் கவனம் செலுத்தவுள்ளோம்’ என்கிறார் சிஸ்கோ Global Collaboration துணைத் தலைவர் கார்ல் வைஸெ, ‘ஆசியாவில் இந்தியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா எங்களுடைய முக்கியமான தலங்கள்.’
இதுவரை இந்தத் துறையில் சிஸ்கோவின் வருவாயில் 55% வட அமெரிக்காவிலிருந்து வந்தது. மீதம் ஐரோப்பா, மேற்கு ஆசியா, லத்தீன் அமெரிக்கா, ஆசியா பசிபிக் நாடுகளில் இருந்து கிடைக்கிறது. இனி, இந்தியாவிலும் இந்தத் தொழில்நுட்பங்களைப் பரவலாகப் பார்க்கலாம்!
‘இந்தியர்கள் விலை விஷயத்தில் கவனமாக இருப்பார்கள்’ என்கிறார் கார்ல் வைஸெ, ‘அதற்கு ஏற்றபடி எங்கள் தயாரிப்புகளை வடிவமைத்திருக்கிறோம், விலை நிர்ணயித்திருக்கிறோம். இந்திய நிறுவனங்கள் இதன் மதிப்பை இப்போதுதான் உணரத் தொடங்கியுள்ளன.’
’முன்பெல்லாம் இதுபோன்ற மென்பொருள்கள் காசு மிச்சம் என்பதற்காகவே பயன்படுத்தப்பட்டன. இப்போதும் அந்த நிலை மாறிவிடவில்லை. ஆனால் நிறுவனங்கள் அதன் மற்ற பலன்களையும் பார்க்கின்றன’ என்கிறார் கார்ல் வைஸெ, ‘அதற்கு எங்கள் தொழில்நுட்பம் உதவும்.’
நிதிச் சேவைகள், கல்வி மற்றும் ஆரோக்கியத் துறைகளில்தான் சிஸ்கோவின் தயாரிப்புகள் அதிகம் விற்கின்றன. இப்போது அதில் ஒரு தேக்கம் ஏற்பட்டிருந்தாலும், உலகெங்கும் நேர்ந்துள்ள பொருளாதார மாற்றங்களால் விரைவில் இந்நிலைமை மாறும் என்று அந்நிறுவனம் நம்புகிறது.
உலகெங்கும், இந்தத் துறை சார்ந்த மார்க்கெட் 15 முதல் 20 பில்லியன் டாலர் என்கிறது சிஸ்கோ. அதில் குரல் பிரிவில் 40%, வீடியோ பிரிவில் 47%, கான்ஃபரன்ஸிங் பிரிவில் 50% சந்தைப் பங்கு சிஸ்கோவுக்குச் சொந்தமானது!

0 comments:

Post a Comment