Saturday, 15 February 2014

டெக்னாலஜி பிரபலங்களின் காதல் கதைகள்


gates
1. Bill Gates: மைக்ரோசாஃப்ட் ராஜ்ஜியத்தின் தலைவர், தன்னுடைய ராணியைக் கவரப் பல உத்திகளைப் பயன்படுத்தியிருக்கிறார். மெலிண்டா ஃப்ரெஞ்சை ஆறு வருடங்கள் காதலித்தபிறகு, தனித்துவமானமுறையில் கல்யாணத்துக்கு விண்ணப்பம் போட்டார். இருவரும் ஒரு தனி விமானத்தில் ஒமாஹாவுக்குச் சென்று, அங்கே ஒரு நகைக் கடையில் வாரன் பஃபெட்டைச் சந்தித்தார்கள். அங்குதான் அவர்களது கல்யாண மோதிரம் வாங்கப்பட்டது. அவர்களுடைய திருமணத்துக்காக, Lanai என்ற ஹவாய் தீவில் உள்ள ஒரு ஹோட்டல்முழுவதையும் பில் கேட்ஸ் வாடகைக்கு எடுத்தார்!
mark-fb
2. Mark Zuckerberg: பெரிய பணக்காரர், ஆனால் பணத்தை வீசி எறிகிற பேர்வழி அல்ல, காதலிக்குக்கூட. மார்க்கும் ப்ரிஸ்சிலா சானும் ஒன்பது வருடத்துக்குமேல் காதலித்தார்கள், $25,000 மோதிரம் ஒன்றைக் கொடுத்து அவரைத் தன் வீட்டிலேயே எளிமையானமுறையில் திருமணம் செய்துகொண்டார் மார்க்.
parker
3. Sean Parker: இவரும் இவரது மனைவி அலெக்ஸாண்ட்ரா லெனாஸும் ‘The Lord of the Rings’ படத்தின் பெரிய ரசிகர்கள். ஆகவே, சுமார் 10 மில்லியன் டாலர் செலவில், அந்தப் படத்தில் வரும் காட்டைப்போலவே ஒரு செட் போட்டு, அதில் திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்துக்கு வந்த விருந்தினர்களுக்கும் அதே பாணி உடைதான்!
david-karp
4. David Karp: Tumblr பிரபலமான டேவிட் கார்ப் பெரிதாகச் செலவு செய்கிறவர் இல்லை. அவர் வீட்டில் ஒரே ஒரு சோஃபாவும் டிவியும்தான் பெரிய சொத்துகள். ஆனால், தன் காதலி ரேச்சல் ஏக்லெக்காக, ஸ்டார் ஹோட்டல்களில் உள்ளதுபோல் ஓர் அருமையான சமையலறையைக் கட்டிக்கொடுத்த காதலர் இவர்!
Merissa mayer
5. Marissa Mayer: இப்போதைய யாஹூ தலைவர், முன்பு கூகுளில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது தன் காதலர், தொழில்முனைவோர் ஜக் போகைத் திருமணம் செய்துகொண்டார். சான் ஃப்ரான்ஸிஸ்கோவில் பெரிய கோலாகலமாக இந்த விழா நடைபெற்றது!
steve-jobs
6. Steve Jobs: ஒரு விழாவில் தன் வருங்கால மனைவி லௌரென் பாவெலைச் சந்தித்தார் இவர். அன்று இரவு அவர்கள் சாப்பிடச் செல்வதாகத் திட்டம். ஆனால் ஒரு பிஸினஸ் மீட்டிங் குறுக்கிட்டது. ஜாப்ஸ் யோசித்தார், ‘எது எனக்கு முக்கியம்?’… அங்கே தொடங்கிய அவர்களுடைய காதல், அடுத்த ஆண்டு திருமணத்தில் நிறைந்தது.
Jeff Bezos
7. Jeff Bezos: மூன்றே மாதக் காதல், அதன்பிறகு காதலி மெக்கென்ஸியுடன் திருமண நிச்சயதார்த்தம். ‘அவள் எதை அணிய விரும்புகிறாள் என்று கவனித்து அதை வாங்கித் தந்து அசத்துவேன்!’ என்று ரொமாண்டிக்காகச் சொல்கிறார் இவர்.
david
8. Dave Morin: காதலி ப்ரிட்டானி பொஹ்னெட்டிடம் ஒரு கடற்கரையில் வைத்துத் தன் காதலைச் சொன்னார். அதுவும், மணலில் எழுதிய காதல் செய்தி. பிறகென்ன? அவர் உடனே சம்மதம் சொன்னார்!
larry page
9. Larry Page: இவரும் இவரது காதலில் லூசி சௌத்வொர்த்தும் ஒரு தனித் தீவில் திருமணம் செய்துகொண்டார்கள். 600க்கும் மேற்பட்டோர் இந்தத் திருமணத்துக்கு வந்திருந்தார்கள்.
chris
10. Chris Hughes: இவருடைய கணவர் சீன் எல்ட்ரிட்ஜ் அரசியலில் வளர்ந்துவருபவர். அதற்காக 2 மில்லியன் டாலர் செலவழித்து நியூ யார்க்கில் ஒரு வீடு வாங்கியது இந்தக் காதல் ஜோடி!

Related Posts:

  • MVC-Examining the Edit Methods and Edit View In this section, you'll examine the generated Edit action methods and views for the movie controller. But first will take a short diversion to make the release date look better. Open the Models\Movie.cs … Read More
  • Creating a Connection String and Working with SQL Server LocalDB Creating a Connection String and Working with SQL Server LocalDB The MovieDBContext class you created handles the task of  connecting to the database and mapping Movie objects to database  rec… Read More
  • Adding a Model in MVC In this section you'll add some classes for managing movies in a database. These classes will be the "model" part of the ASP.NET MVC app. You’ll use a .NET Framework data-access technology known as the Entity Framewor… Read More
  • Accessing Your Model's Data from a Controller in MVC In this section, you'll create a new MoviesController class and write code that retrieves the movie data and displays it in the browser using a view template. Build the application before going on to th… Read More
  • Adding a View in MVC In this section you're going to modify the HelloWorldController class to use view template files to cleanly encapsulate the process of generating HTML responses to a client. You'll create a view template file usi… Read More

0 comments:

Post a Comment