Wednesday, 5 February 2014

பேஸ்புக் ஒரு சமூகநோய்! அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்


பேஸ்புக் ஒரு சமூகநோய் என சமீபத்தில் ஆய்வு நடத்திய பிரின்ஸ்டன் பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் வல்லரசாக திகழ்கிறது பேஸ்புக், மில்லியன் கணக்கான மக்கள் இதற்கு அடிமையாகி உள்ளனர்.
பூஜ்ஜியத்தில் ஆரம்பித்து, கோடிக்கணக்கில் லாபத்தை கொட்டிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பேஸ்புக் குறித்து பிரின்ஸ்டன் பல்கலைகழகம் ஆய்வு நடத்தியது.
இதில் பேஸ்புக் ஒரு சமூகநோய் என்றும், 2017ம் ஆண்டுக்குள் 80 சதவிகித வாடிக்கையாளர்கள் இதனை விட்டு விலகிவிடும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் எப்படி ஒரு நோய் வேகமாகப் பரவிப் பின் தொய்வடைகிறதோ, அதே போல பேஸ்புக்கின் நிலையும் இருக்கும் என்று பல எடுத்துக் காட்டுகளுடன் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
டிசம்பர் 2012ல் தான் பேஸ்புக் இணையதளம் மிக அதிகமான அளவில் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றது, தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறது.
இந்த வளர்ச்சி இன்னும் சில ஆண்டுகளே இருக்கும் என்றும் 2017ம் ஆண்டு காலத்தில் பெரும்பாலான நபர்கள் இதனை விட்டு விலகி விடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

Related Posts:

0 comments:

Post a Comment