Tuesday, 11 February 2014

Calling Apps: இலவசம்!

சந்தையில் பெரும் எண்ணிக்கையிலான புதிய மொபைல் ஃபோன்கள், டாப்லட்கள் போன்றவை அறிமுகமாகியுள்ள நிலையில், ஆண்ட்ராய்ட், மற்ற வகை ஃபோன்களுக்கான Calling Apps அதிகரித்துவருகின்றன.
இவற்றைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் தங்களது நண்பர்கள், உறவினர்களை அவர்கள் எங்கே இருந்தாலும் (வெளிநாடுகளில் இருந்தாலும்கூட) அழைக்கலாம், செய்தி அனுப்பலாம், இதில் ஏகப்பட்ட பணம் மிச்சமாகும்.
Viber, Skype போன்றவை பிரபலமாக இருக்கும் இந்தத் துறையில், பல இலவச அப்ளிகேஷன்களும் கிடைக்கின்றன. இவை மொபைல் பயனாளர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளன.
1. கூகுள் வாய்ஸ்: உள்ளூர், வெளிநாட்டு அழைப்புகள், இலவச SMS, ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கு Voicemail வசதி, ஃபோன் அழைப்பைப் படித்துக் காட்டும் வசதி…
2. Tango: ஐஃபோன், ஐபேட்களுக்கான அப்ளிகேஷன், தரமான வீடியோ அழைப்புகள், வீடியோ செய்திகள்… இவை ஆண்ட்ராய்ட் ஃபோன்களுக்கும் செல்லும். அழைப்புகளை ஏற்கும் வசதியும் உண்டு
3. Line: இலவசக் குரல் அழைப்புகள், செய்திகளுக்கான அப்ளிகேஷன், பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோரால் பயன்படுத்தப்படுகிறது. 230 நாட்டு மக்கள் இதனை உபயோகப்படுத்துகிறார்கள். எழுத்து, ஃபோட்டோ, icons, emoticons, நாம் இருக்கும் இடம்பற்றிய விவரங்கள் என்று பலவற்றையும் இதன்வழியே அனுப்பமுடியும்
4. Kakao Talk: இலவச அழைப்புகள், செய்திகள், ஃபோட்டோக்கள், வீடியோக்கள், இட விவரம் போன்றவற்றை அனுப்புவதற்கான அப்ளிகேஷன். விண்டோஸ், ஆண்ட்ராய்ட், ப்ளாக்பெர்ரி, ஐஃபோன், ஐபேட், படா என்று பலவகை ஃபோன்களில், கம்ப்யூட்டரில் இயங்கும், ஒரே நேரத்தில் பலருடன் பேசும் வசதி உண்டு, இதில் கேம்ஸும் விளையாடலாம்!
5. Fring: இணையம்மூலம் பேசலாம், அரட்டை அடிக்கலாம், Google Talk, Skype, MSN, Twitter போன்றவற்றுடன் இணைந்து செயல்படும், இசையைப் பகிர்ந்துகொள்ளுதல் போன்ற கூடுதல் வசதிகளும் உள்ளன.
6. ICQ: அருமையான ஒலித் தரத்தில் ஒலி அழைப்புகள், இலவச வீடியோ கால்கள் போன்றவை இதில் உண்டு. நேரடியாக உங்களுடைய மொபைல் எண்ணைக் கொண்டே இதில் நுழையலாம், உங்களது சோஷியல் மீடியா நண்பர்கள் எல்லாருடனும் ஒரே இடத்தில் இருந்தபடி பேசலாம்.

0 comments:

Post a Comment