Sunday, 9 February 2014

இணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்

இரட்டிப்பு ஆனந்தம் என்பார்களோ அப்படி ஒரு ஆனந்தத்தை புத்தக பிரியர்களுக்கு தரக்கூடிய இணையதளமாக ரீட்எனிபுக் தளத்தை சொல்லலாம்.பெய‌ருக்கேற்ப‌ எந்த‌ புத்த‌க‌த்தையும் ப‌டிக்க‌ வ‌ழி செய்கிற‌து இந்த‌ த‌ள‌ம்.அதிலும் மிக‌வும் சுல‌ப‌மாக‌,இபுக்காக‌. 

புத்த‌க‌ பிரிய‌ர்க‌ளுக்காக‌ என்று பிர‌த்யேக‌ இணைய‌த‌ள‌ங்க‌ள் ப‌ல‌ இருக்கின்ற‌ன‌.வெறும்னே புத்த‌க‌ங்க‌ளை ப‌ட்டிய‌லிடாமல் ர‌ச‌னையின் அடிப்ப‌டையில் ந‌ம‌க்கு பிடிக்க‌ கூடிய‌ புதிய‌ புத்த‌க‌ங்க‌ளை ப‌ரிந்துரைக்கும் அருமையான‌ த‌ள‌ங்க‌ளும் இருக்கின்ற‌ன‌.

அதே போல‌ இணைய‌த்தில் இபுக் வ‌டிவில் கிடைக்க‌ கூடிய‌ புத்த‌க‌ங்க‌ளை தேட‌ உத‌வும் த‌ள‌ங்க‌ளுமிருக்கின்ற‌ன‌.இல‌வ‌ச‌ இபுக்க‌ளை அடையாள‌ம் காட்டும் த‌ள‌ங்க‌ளையும் நீங்க‌ள் அறீந்திருக்க‌லாம்.
‘ரீட் எனி புக்’ த‌ள‌ம் இந்த‌ இர‌ண்டையுமே செய்கிற‌து.
இந்த‌ த‌ள‌த்தில் உங்க‌ளுக்கு பிடித்த‌மான‌ புத்த‌க‌த்தை தேர்வ செய்து அந்த‌ புத்த‌க‌த்தை அப்ப‌டியே இபுக்காக‌ ப‌டிக்க‌த்துவ‌ங்கி விட‌லாம்.

இத‌ற்காக‌ த‌னியே எந்த‌ சாப்ட்வேரையும் த‌ர‌விற‌க்க‌ம் செய்ய‌ வேண்டாம்.ஏன் ப‌டிக்க‌ப்போகும் புத்த‌க‌த்தை கூட‌ ட‌வுண்லோடு செய்ய‌ வேண்டாம்.புத்த‌க‌த்தை தேர்வு செய்த‌ பின் அதில் ஒரே ஒரு கிளிக் செய்தால் போதும் அந்த‌ புத்த‌க‌த்தை ப‌டிக்க‌த்துவ‌ங்கி விட‌லாம்.அத‌ற்கான‌ ரீட‌ர் அதே ப‌க்க‌த்தில் தோன்றுகிற‌து.என்வே பிர‌வுச‌ரை விட்டு வெளியே செல்ல‌வும் தேவையயில்லை.

ப‌க்க‌ங்க‌ளை திருப்புவ‌து போல‌ ஒவ்வொரு ப‌க்க‌மாக‌ கிளிக்செய்து ப‌டித்துக்கொண்டே இருக்க‌லாம்.தேவை என்றால் ரீடரை மட்ட்டும் பெரிதாகி படிக்கவும் வசதி உள்ளது. மாஜிகல் ரிய‌லிச‌ மேதை மார்குவேசின் ஒரு நூற்றாண்டு த‌னிமையில் துவ‌ங்கி எல்லா பிரிவுக‌ளிலும் புத்த‌க‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌.
புத்த‌க‌ங்க‌ள் எதிர்பார்க்க‌ கூடிய‌து போல‌ தனித்த‌னி த‌லைப்புக‌ளின் கீழ் தொகுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.
ப‌ட்டிய‌லை கூட‌ பார்க்க‌ வேண்டாம் நமக்கு தேவையான‌ புத்த‌க‌த‌தை குறிப்பிட்டு தேட‌வும் முடியும்.அதே போல‌ ம‌ற்ற‌வ்ர்க‌ள் ப‌டிக்கும் புத்த‌க‌ங்க‌ளையும் ஒரு பார்வை பார்த்து எல்லோரும் ப‌டிப்ப‌தை ப‌டித்து பார்க்க‌லாம்.

ஒவ்வொரு புத்த‌க‌ம் ப‌ற்றீய‌ சுருக்க‌மான அறிமுக‌த்தோடு அவ‌ற்றின் வ‌கை குறிப்பிட‌ப்ப‌ட்டு அத்தியாய‌ம் அத்தியாமாக‌ ரிட‌ரில் புத‌த்க‌ம் விரிவ‌து புத்த‌க‌ பிரிய‌ர்க‌ளுக்கு உண‌மையிலேயே ப‌ர‌வ‌ச‌ம‌ன‌ அனுப‌வ‌ம்.ந‌ல்ல‌ புத்த‌க‌ம் என்றால் ஒரே மூச்சில் கூட‌ வாசித்து விட‌லாம்.புதிய‌ புத்த‌க‌ம் என்றால் எப்ப‌டி இருக்கிற‌து என் சில‌ ப‌க்க‌ங்க‌ளை புர‌ட்டி பார்க்க‌லாம்.

புத்த‌க‌ங்க‌ளை ட‌வுண்லோடு செய்வ‌தும் அவ‌ற்றின் கோப்பு அள‌வும் சோத‌னையாக‌ அமைய‌லாம் என்னும் போது ஒரே ப‌க்க‌த்திலேயே ஒரே கிளிக்கிலேயே புத்தக‌த்தை ப‌டிக்க‌த்துவ‌ங்கி விட‌லாம் என்ப‌து உண்மையிலேயே பாராட்ட‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம் தான்.
புத்தக‌ பிரிய‌ர்க‌ளை இந்த‌ த‌ள‌ம் நிச்ச‌ய‌ம் க‌வ‌ரும்.தங்க‌ள் அபிமான‌ த‌ள‌மாக‌ இத‌னை குறித்து கொள்ள‌லாம்.
அப்ப‌டியே இந்த‌ த‌ள‌த்தில் இன்னும் இட‌ம் பெறாத‌ புத்தக‌த்தை சேர்க்க‌ சொல்லி ப‌ரிந்துரைக்க‌லாம்.

http://www.readanybook.com/

Related Posts:

  • விண்டோஸ் 8 ஷார்ட்கட் கீகள்! நீங்கள் விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 பயன்படுத்துகிறீர்களா? முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தினை இதிலிருந்து பெற்று வருகிறீர்கள் என்பது உறுதி. முந்தைய விண்டோஸ் சிஸ்டங்களுக்கும், இதற்குமான ஓர் அடிப்படை வேறுபாடு, இதன் டச் ஸ்கி… Read More
  • Google Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது (வீடியோ இணைப்பு) கூகுள் நிறுவனமானது Google Fiber எனும் அதிவேக இணைய இணைப்பினை வழங்குவது தொடர்பான அறிவித்தலை ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலையில் இந்த வாரம் மேலும் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது அமெரிக்காவில் 34 நகரங்களில் இச்சேவையினை … Read More
  • SlickLoginஐ வாங்கியது கூகுள் இஸ்ரேலைச் சேர்ந்த SlickLogin என்ற நிறுவனம் இணையத் தளங்களுக்கான வித்தியாசமான Login Optionகளை வழங்கிவந்தது. அதனை இப்போது கூகுள் வாங்கியுள்ளது. மூன்று முன்னாள் ராணுவத்தினரால் தொடங்கப்பட்ட நிறுவனம் இது. இதன்மூலம், … Read More
  • Android 5: வருகிறது! சர்வதேச அளவில் ஸ்மார்ட்ஃபோன் என்றாலே ஆண்ட்ராய்ட் என்று பெயரெடுத்துள்ள இந்த ஆபரேட்டிங் சிஸ்டத்தின் ஐந்தாவது வடிவம், விரைவில் வெளியாகிறது! இந்த வடிவத்தின் பெயர் என்ன? எப்போது வெளியாகும்? அதில் என்னென்ன வசதிகள் இருக்கும்? எ… Read More
  • ஆண்ட்ராய்டில் உண்டு, ஐஃபோனில் இல்லை ஐஃபோன் பிரபலம்தான், உசத்திதான், ஆனால், அதில் இல்லாத சில விஷயங்கள் ஆண்ட்ராய்டில் உண்டு! உதாரணமாக, ஐஃபோனில் ஒருவர் தன் கீபோர்டை மாற்றமுடியாது. ஆண்ட்ராய்டில் மாற்றலாம்! இப்படி இன்னும் பலவற்றைச் சொல்லமுடியும். இதோ, உங்களுக்… Read More

0 comments:

Post a Comment