Thursday, 20 February 2014

SlickLoginஐ வாங்கியது கூகுள்

இஸ்ரேலைச் சேர்ந்த SlickLogin என்ற நிறுவனம் இணையத் தளங்களுக்கான வித்தியாசமான Login Optionகளை வழங்கிவந்தது. அதனை இப்போது கூகுள் வாங்கியுள்ளது.
மூன்று முன்னாள் ராணுவத்தினரால் தொடங்கப்பட்ட நிறுவனம் இது. இதன்மூலம், ஒரு குறிப்பிட்ட இணையத் தளத்தில் நுழைவதற்குப் பயனாளர்கள் தங்களது ஃபோன்களை அதன்முன்னே காண்பித்தாலே போதும்.
தொடங்கப்பட்டு வெறும் 6 மாதங்களே ஆன இந்நிறுவனம், இதுவரை எந்த சாஃப்ட்வேரையும் வெளியிடவில்லை, நிதி திரட்டவும் இல்லை. இந்நிலையில் இவர்களை கூகுள் வாங்கியிருப்பது ஆச்சர்யமான விஷயம்தான்!
‘பாதுகாப்பைப் பலப்படுத்துவதே எங்கள் நோக்கம்’ என்கிறார்கள் SlickLogin நிறுவனர்கள். ‘இந்நோக்கத்துடன் நாங்கள் கூகுளில் இணைகிறோம்! இதே துறையில் அவர்களது பணிகளில் துணை நிற்போம்.’
இதனை கூகுளும் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் இந்நிறுவனம் என்ன விலைக்கு வாங்கப்பட்டது என்பது தெரியவில்லை.
இஸ்ரேலில் ஏற்கெனவே Waze என்ற நிறுவனத்தை வாங்கியுள்ளது கூகுள். தற்போது அதன் இஸ்ரேல் அலுவலகத்தில் சுமார் 450 பேர் வேலை செய்கிறார்கள்.

0 comments:

Post a Comment