நாம் கம்பியூட்டரை பயன்படுத்துகையில் நமக்கே தெரியாமல் சில வைரஸ்கல் நமது கம்பியூட்டருக்குள் வந்துவிடும் இதனால் புதுப்புது பிரச்னைகள் தலை தூக்குகின்றனவா? அப்படியானால், உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ், ஸ்பைவேர் அல்லது வேறு ஏதேனும் மால்வேர் புரோகிராம்கள் பாதித்திருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த பிரச்னைகள், ஹார்ட்வேரில் பிரச்னைகள் ஏற்பட்டாலும் தென்படலாம்; இருப்பினும் மால்வேர் இருக்கின்றனவா என்று சோதனை செய்து உறுதி செய்து கொள்வது நல்லது. உங்களுடைய கம்ப்யூட்டரை இன்டர்நெட் இணைப்பி லிருந்து நீக்கவும். கம்ப்யூட்டரை சுத்தப் படுத்த நீங்கள் தயாராகும்வரை இன்டர்நெட் இணைப்பினைத் தர வேண்டாம். இதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள மால்வேர், பரவுவதையும், உங்கள் தனிப்பட்ட தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்புவதனையும் தடுக்கலாம். உங்களுடைய கம்ப்யூட்டரில் மால்வேர் இருப்பதாக உணர்ந்தால், சேப் மோடில் பூட் செய்திடவும். இதற்கு கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்து, பின்னர் எப்8 கீயின் இடம் அறியவும். பின்னர், பெர்சனல் கம்ப்யூட்டரை இயக்கி, திரையில் ஏதேனும் தென்பட்டவுடன், எப்8 கீயினைத் தட்டிக் கொண்டே இருக்கவும். இதனால், Advanced Boot Options என்ற மெனு கிடைக்கும். அதில் Safe Mode with Networking என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து என்டர் தட்டவும். சேப் மோடில் உங்கள் கம்ப்யூட்டர் இதற்கு முன் இருந்ததைக் காட்டிலும் சற்று வேகமாக இயங்கு வதனைக் காணலாம். அவ்வாறு இயங்கி னால், மால்வேர் நிச்சயம் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ளது.
Sunday, 16 February 2014
Home »
» வைரஸ் வந்த கம்பியூட்டரை இப்படி செய்யுங்கள்...!
0 comments:
Post a Comment