ஐஃபோன் பிரபலம்தான், உசத்திதான், ஆனால், அதில் இல்லாத சில விஷயங்கள் ஆண்ட்ராய்டில் உண்டு!
உதாரணமாக, ஐஃபோனில் ஒருவர் தன் கீபோர்டை மாற்றமுடியாது. ஆண்ட்ராய்டில் மாற்றலாம்!
இப்படி இன்னும் பலவற்றைச் சொல்லமுடியும். இதோ, உங்களுக்காக, ஆண்ட்ராய்டில் உள்ள, ஐஃபோனில் இல்லாத முக்கியமான சவுகர்யங்களின் பட்டியல்:
1. Swype: மிகச் சுலபமான கீபோர்ட், டைப் செய்யாமல் தேய்த்துத் தேய்த்து எழுதலாம், மிக வேகமாகவும் எளிதாகவும்
2. Tasker: கிட்டத்தட்ட ஒரு மினி அஸிஸ்டென்ட்மாதிரி இந்த அப்ளிகேஷன், ‘நான் அடுத்த 1 மணி நேரம் மீட்டிங்கில் இருப்பேன், யாராவது அப்போது ஃபோன் செய்தால், மன்னிப்புக் கேட்டு எஸ் எம் எஸ் அனுப்பிவிடு’ என்றெல்லாம் கட்டளையிட்டால் போதும், விசுவாசமாகச் செய்யும்!
3. Bitcoin: விர்ச்சுவல் கரன்ஸியாகிய பிட்காயினை மக்கள் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களில் பயன்படுத்த இயலும், ஆனால் ஐஃபோனில் அது முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது
4. NFC: காருக்குள் நுழைந்தவுடன் ஃபோனைக் கார் மோடில் மாற்றுவது, பிறருடன் விவரங்களைப் பகிர்ந்துகொள்வது, Tasker Scriptகளை இயக்குவது போன்ற பல்வேறு பயனுள்ள வசதிகளைக் கொண்ட அப்ளிகேஷன் இது
5. Locale: இந்த அப்ளிகேஷன் ஒருவர் எங்கே இருக்கிறார் என்பதைப் பொறுத்து, அல்லது அவரது ஃபோனின் அப்போதைய நிலைமையைப் பொறுத்து அதில் பல மாற்றங்களைச் செய்யவல்லது. உதாரணமாக, பேட்டரி அளவு குறைந்தால் எச்சரிப்பது, பேட்டரியைத் தின்னக்கூடிய விஷயங்களை நிறுத்துவது, வால் பேப்பரை மாற்றுவது, மணி அடிக்காமல் செய்வது … இப்படி!
6. GoLauncher EX: ஃபோனின் இயக்கத் தோற்றத்தை நம் விருப்பம்போல் மாற்றி அமைக்க உதவும் அப்ளிகேஷன்.
7. Cover: ஒருவருடைய லாக் ஸ்க்ரீனில், அவர் இருக்கும் இடத்துக்கு ஏற்ப அப்ளிகேஷன்களைத் தேர்ந்தெடுத்துக் காட்டவல்லது. உதாரணமாக, வீட்டில் இருக்கும்போது பொழுதுபோக்கு அம்சங்கள், அலுவலகத்தில் இருக்கும்போது அலுவலகம் சார்ந்த அப்ளிகேஷன்கள், பயணம் செய்யும்போது வேறு அப்ளிகேஷன்கள்… இப்படி!
8. Flash: சில இணையத் தளங்கள் அல்லது விளையாட்டுகள் Flash தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டிருந்தால், அவற்றைப் பார்க்க உதவும் தொழில்நுட்பம்.
9. Timely: இது ஒரு வித்தியாசமான அலார்ம் க்ளாக். இதைக் கண்டுகொள்ளாமல் வேறு வேலை பார்க்கலாம் என்றால் நடக்காது. காரணம், ‘Snooze’ பொத்தானில் பல சவால்கள் உங்களுக்காகக் காத்திருக்கும்
10. App Lock: தனித்தனி அப்ளிகேஷன்களை பாஸ்வேர்ட் கொண்டு லாக் செய்ய உதவும் அப்ளிகேஷன். யாராவது தவறான பாஸ்வேர்ட் கொடுத்தால், அவர்களை ஃபோட்டோ எடுத்துவிடும்
0 comments:
Post a Comment