Wednesday, 12 February 2014

’Days’ அப்ளிகேஷனை வாங்கிய யாஹூ

பல சிறு நிறுவனங்களை மும்முரமாக வாங்கித் தள்ளும் யாஹூவின் வரிசையில் லேட்டஸ்ட், நியூ யார்க்கைச் சேர்ந்த மொபைல் துறை நிறுவனமான Wander.
இந்த நிறுவனம் “Days” என்ற அப்ளிகேஷனை உருவாக்கிப் புகழ் பெற்றது. இது ஒருவிதத்தில் சோஷியல் டயரி. இதில் நாள்முழுவதும் நடக்கும் விவரங்களை எழுதி அடுத்த நாள் மொத்தமாகப் பகிர்ந்துகொள்ளலாம்.
யாஹூ இந்நிறுவனத்தை வாங்கியபிறகும் “Days” அப்ளிகேஷன் எப்போதும்போல் தொடரும். அதனை உருவாக்கிய குழுவினர் அனைவரும் யாஹூவில் வேறு மொபைல் ப்ராஜெக்ட்களில் செயல்படத் தொடங்குவார்கள்.
‘நாங்கள் யாஹூவுடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறோம்’ என்கிறது Wander நிறுவனம். ஆனால் என்ன விலைக்கு இந்நிறுவனம் வாங்கப்பட்டது என்பது தெரியவில்லை. $10 மில்லியன் தரப்பட்டதாகச் சொல்கிறது TechCrunch. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஏதும் இதுவரை இல்லை!

0 comments:

Post a Comment