ஆஃபீஸ் 365, எக்ஸெல் ஆகியவற்றைக் கொண்டு, Cloudல் ஒரு புத்தம்புதிய Business Intelligence suiteஐ வெளியிடுகிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். Power BI என்று பெயரிடப்பட்டுள்ள இதில் data access, data management, data analysis உள்ளிட்ட பல பயனுள்ள டூல்கள் இருக்கும்.
இதன்மூலம், சிறிய, பெரிய நிறுவனங்கள் தங்களது விவரங்களை இணையத்தில் ஏற்றலாம், யார் கண்ணிலும் படாமல் அலசி ஆராயலாம், பிஸினஸ் தீர்மானங்களை எளிதில் எடுக்கலாம்.
இதுதவிர, பகிரங்கமாக எல்லாருக்கும் கிடைக்கும் ’Bing Maps’ போன்ற பொது விவரங்களும் உண்டு. அவற்றையும் அலசலுக்குப் பயன்படுத்தலாம்.
’இது மிகவும் எளிமையான பிஸினஸ் சாதனம்’ என்கிறது மைக்ரோசாஃப்ட். ‘நிறுவனங்கள் இங்கே பலவிதமான கிராஃப்கள், சார்ட்கள், டாஷ்போர்ட்கள் போன்றவற்றை வடிவமைக்கலாம், பின்னர் அவற்றை உரியவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்படி வெளியிடலாம்.’
இதற்குமுன் SQL Server, SharePoint, Excel ஆகியவற்றின்மூலம் பலவிதமான Business Intelligence தீர்வுகளை முயன்றுகொண்டிருந்த மைக்ரோசாஃப்ட். இப்போது அதனை மேலும் எளிமையாகப் பலரிடம் சென்று சேர்க்க இந்த Cloud வழியைத் தேர்ந்தெடுத்துள்ளது.
‘Power BIயில் Backend work என்பதே கிடையாது, எல்லாம் மைக்ரோசாஃப்டே செய்துவிட்டது’ என்கிறார் BI Scorecard ஆய்வாளர் சிண்டி ஹௌசன், ‘இது எல்லாருக்கும் ஏற்றது, மிகவும் எளிமையானது! இதன்மூலம் Office 365 இன்னும் சிறப்பாகும், Google Apps Suiteஉடன் நன்கு போட்டியிடும்.’
குறிப்பாக, SQL என்று எதையும் எழுதாமல், சாதாரண ஆங்கிலத்திலேயே கேள்விகளைக் கேட்டுப் பதில் பெறுவது இதன் சிறப்பம்சம். உதாரணமாக, ‘top skiers in the olympics’ என்பதுபோல் தட்டித் தேடலாம். அந்தக் கேள்விக்கான விடை நாடுவாரியாகப் பட்டியலாகத் தரப்படலாம், அல்லது ஒரு மேப்பில் திரையிடப்படலாம்!’
Power BI விலை, ஒவ்வொருவருக்கும் மாதம் $20 என்ற அளவில் தொடங்குகிறது. ஏற்கெனவே Office 365 வைத்துள்ளவர்கள் இந்தத் தொகையைமட்டும் செலுத்தினால் போதும். கூடுதல் வசதி வேண்டுவோர் ஒவ்வொருவருக்கும் மாதம் $54க்குக் கிடைக்கும் ProPlus வாங்கினால், லேட்டஸ்ட் Excel, PowerQuery, Power Map, Data Visualization என அனைத்தும் அதில் கிடைக்கும்!
0 comments:
Post a Comment