Sunday, 18 May 2014

Windows Phone Store தளத்திலிருந்து அதிரடியாக WhatsApp நீக்கம்


மொபைல் சாதனங்கள் மூலம் குறுஞ்செய்திகள், புகைப்படங்களை செலவின்றி பகிர்ந்து கொள்வதற்கு WhatsApp அப்பிளிக்கேஷன் பெரிதும் உதவுகின்றது.
அண்மையில் பேஸ்புக் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டிருந்த இந்த அப்பிளிக்கேஷனின் Windows Phone - களுக்கான பதிப்பு Windows Phone Store தளத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிமுகம் செய்த பிந்திய பதிப்பான Windows Phone 8.1 இயங்குதளத்தில், WhatsApp அப்பிளிக்கேஷன் செயற்படும்போது சில குறைபாடுகள் காணப்படுவதே இதற்கு காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் அப்பிளிக்கேஷனை தற்போது Windows Phone Store தளத்தில் தேடும்போது குறித்த அப்பிளிக்கேஷன் கிடைக்கப்பெறவில்லை என்ற செய்தியே தென்படும்.
எனினும் விரைவில் மீண்டும் WhatsApp அப்பிளிக்கேஷன் Windows Phone Store தளத்தில் இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment