Sunday, 18 May 2014

வந்துவிட்டது மோதிர மவுஸ்


உலகில் நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக அனைத்து துறைகளிலும் நானோ தொழில்நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக எலக்ட்ரானிக் பொருட்களில் நானோ தொழில்நுட்பம் பயன்பாடு அதிகரித்துள்ளது. இன்றைய (டேபுள் கம்யூட்டர்கள்) கணிப்பொறிகள் இயங்குவதில் மவுஸ் முக்கிய பங்கு வகித்து வருகிறது. கனிப்பொறி திரையில் நமக்கு தேவையானவற்றை நேரடியாக தேர்வு செய்ய மவுஸ் பயன்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள மவுஸ்கள் மனிதனின் உள்ளங்கை அளவில் உள்ளது. 

வயர் இணைப்பு, புளூடூத் போன்ற இணைப்புகள் மூலமாக இந்த மவுஸ்கள் செயல்படுகின்றன. தனிநபர் கனிப்பொறி மற்றும் லேப்டாப்களில் கூட இந்த மவுஸ்களின் பயன்பாடு இருந்து வருகிறது. ஆனாலும் உள்ளங்கை அளவு இருந்த மவுசின் வடிவம் மட்டும் மாறாமல் இருந்தது. தற்போது அதுவும் மாறிவிட்டது. உள்ளங்கை அளவில் இருந்த மவுஸ், விரலில் மாட்டும் மோதிரத்தின் அளவுக்கு மாறிவிட்டது. புளூடூத் வசதியுடன் இயங்கும் இந்த மோதிரம் மவுசிற்கு ' NOD மவுஸ் ' என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இதை கனிப்பொறியில் உள்ள புளூடூத்துடன் இணைத்து, பின்னர் விரலில் மாட்டிக் கொண்டு கனிப்பொறியை இயக்கலாம். இதனால் கனிப்பொறிக்கு மிக அருகிலேயே அமர்ந்து கொண்டு இயக்குவதால் ஏற்படும் கண் எரிச்சலுக்கு தீர்வு கிடைத்துள்ளது. தற்போது வெளிவந்துள்ள NOD மவுஸ் அறிமுகமான சில நாட்களிலேயே 3,000க்கும் மேற்பட்ட மவுஸ்கள் விற்பனை ஆகியுள்ளது. 

0 comments:

Post a Comment