Tuesday, 15 April 2014

இன்டர்நெட் ஹேங் ஆக காரணங்கள் இதுதான்...!

நாம் இணையத்தில் உலா வருகையில், பல வேளைகளில், பார்க்கின்ற தளம் அப்படியே உறைந்து போகலாம். சில வேளைகளில் அதற்கான எர்ரர் செய்தி கிடைக்கும். பல வேளைகளில் எதுவும் காட்டப்படமலேயே தளம் தொடர்ந்து இயங்காது ஹேங் ஆகும். இது போன்ற நிலைகளுக்குப் பல காரணங்கள் உள்ளன. நீங்கள் அடிக்கடி பிரவுஸ் செய்திடும் தளத்தைத் திறந்து உங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பெற்றுக் கொண்டிருக்கையில், வேறு ஒரு வேலைக்காக கம்ப்யூட்டர் மற்றும் பிரவுசிங்கை விட்டு விட்டு, நீங்கள் செல்லலாம். மீண்டும் வந்து பார்க்கிற போது "Session Expired" என்ற செய்தி திரையில் காட்டப்பட்டுக் கொண்டிருக்கும். எந்தவிதமான செயல்பாடும் இன்றி இணையதளத்தைத் திறந்து வைத்திருந்தால் தானாகவே மூடும்படி அந்த தளத்தைத் தயாரித்தவர்கள் வடிவமைத்திருக்கலாம். அதன் எதிரொலியே இது. எத்தனை நொடிகள் இவ்வாறு செயலற்று இருந்தால் அந்த தளம் இந்த செய்தியைக் கொடுக்கும் என்பதனைப் பொதுவாக வரையறுக்க முடியாது. இது அந்த தளத்தை வடிவமைத்தவர்கள் செய்த வரைமுறையாக இருக்கலாம். சில தளங்கள் தங்களிடம் முறையாகப் பதிவு செய்யாதவர்கள் தளத்தைப் பார்க்க சில நிமிடங்களே அனுமதி தரும். அந்த நேரம் முடிந்துவிட்டால் தானாகத் தளம் மூடப்பட்டு "Session Expired" செய்தி கிடைக்கும். மேலும் சில தளங்கள் குக்கீஸ் எனப்படும் குறுந்தகவல் தொகுப்புகளை அனுமதிக்க வேண்டும் என எதிர்பார்க்கும். அப்போதுதான் அடுத்த முறை நீங்கள் அந்த தளத்தை அணுகுகையில் உங்களைப் பற்றிய தகவலை அந்த தளம் அறிந்து கொண்டு உங்களுடன் தகவல் பரிமாறிக் கொள்ள முடியும். எனவே குக்கீஸ் பெறுவதனை நீங்கள் தடுக்கும்படி செட் செய்திருந்தால் மாற்றி விடவும். இதற்கு இன்டர்நெட் எக்ஸ் புளோரரில் Tools, Internet Options சென்று அதில் Privacy டேப் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் திரையில் Default என்னும் பட்டனைக் கிளிக் செய்தால் குக்கீஸ் பெறுவது அனுமதிக்கப்படும். கம்ப்யூட்டரில் பயர்வால் செட்டிங்ஸ் அமைத்திருந்தால் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இணைய தளம் தானாகவே மூடும் வாய்ப்பு உண்டு. ஏனென்றால் பயர்வால் செட்டிங்ஸ் சில தளங்களை இறக்கம் செய்து பார்க்க விடாது. இதனால் பிழைச் செய்தி கிடைக்கலாம். இதற்கு உடனே பயர்வால் செட்டிங்ஸ் பார்த்து திருத்தவும். நீங்கள் விரும்பிப் பார்க்கின்ற தளங்களை பயர்வால் அனுமதிக்கும்படி பயர்வால் செட்டிங்ஸை மாற்றவும். சில வேளைகளில் தவறான நாள், தேதி மற்றும் நேரத்தை உங்கள் கம்ப்யூட்டர் காட்டிக் கொண்டிருந்தால் அதனாலும் "Session Expired" செய்தி வரலாம். ஏனென்றல் சில தளங்கள் பின்புலத்தில் உங்கள் கம்ப்யூட்டரின் நேரத்தோடு இணைந்து சில புரோகிராம்களை இயக்கிக் கொண்டிருக்கலாம். இதனால் தவறான நடவடிக்கைகளுக்குள்ளாகி செஷன் எக்ஸ்பயர் ஆக வாய்ப்புண்டு. மேலே குறிப்பிட்ட எதுவுமின்றி இணைய தளத்தில் எக்ஸ்பயர் செய்தி வருகிறதென்றால், அதுவும் குறிப்பாக ஒரு தளத்திற்காக வருகிறது என்றால் அந்த தளத்தில் பிரச்னை உள்ளது என்று பொருள். அந்த தளத்தை புதுப்பிப்பதற்காக இயக்கத்தை நிறுத்தி வைத்திருக்கலாம். அல்லது அந்த தளத்தைக் கொண்டிருக்கும் சர்வர் இணைய வலையிலிருந்து விடுபட்டிருக்கலாம். அல்லது அந்த சர்வரில் பிரச்னை ஏற்பட்டு பராமரிப்புக்காக சர்வரின் இயக்கம் நிறுத்தப்பட்டிருக்கலாம். "Session Expired" என்ற பிரச்னை முற்றிலும் இணைய தளம் மற்றும் அந்த தளத்தைத் தாங்கிக் கொண்டு வழங்கும் சர்வர் சார்ந்த பிரச்னை ஆகும். எனவே உங்கள் கம்ப்யூட்டரில் செட்டிங்ஸ் சரி செய்வதனால் இது நிவர்த்தி அடையாது. எனவே இந்த செய்தி வரும் பட்சத்தில் பொறுமையாக உடனே அல்லது சில நிமிடங்கள் கழித்து மீண்டும் அதனைப் பெற முயற்சிப்பதுதான் சிறந்த வழியாகும்.

Related Posts:

  • HTML5 Form Elements HTML5 Form Elements HTML5 New Form Elements HTML5 has the following new form elements: <datalist> <keygen> <output> Not all browsers support all the new form elements. However, you c… Read More
  • ஹேப்பி பர்த்டே பேஸ்புக் ஹேப்பி பர்த்டே பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் வல்லரசாக வலம் வரும் பேஸ்புக் இன்று தனது 10வது பிறந்த நாளை இன்று(பிப்ரவரி 4ம் திகதி) கொண்டாடுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் ஜுகர்பெர்க் தனது சக நண்பர்களுடன் சேர்ந்து ஹார்வர்ட… Read More
  • விக்கிபீடியாவிலுள்ள கட்டுரைகளை தரவிறக்கம் செய்வதற்கு விக்கிபீடியாவிலுள்ள கட்டுரைகளை தரவிறக்கம் செய்வதற்கு  கட்டற்ற கலைக்களஞ்சியமாக திகழும் விக்கிபீடியா தளத்தில் பல தரப்பினருக்கும் பயன்தரக்கூடிய கட்டுரைகள், ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளமை யாவரும் அறிந்ததே. இந்த ஆக்கங்கள், கட… Read More
  • HTML5 Tutorial What is HTML5? HTML5 is the latest standard for HTML. The previous version of HTML, HTML 4.01, came in 1999, and the internet has changed significantly since then. HTML5 was designed to replace both HTML 4,… Read More
  • HTML5 Input Types HTML5 Input Types HTML5 New Input Types HTML5 has several new input types for forms. These new features allow better input control and validation. This chapter covers the new input types: color date date… Read More

0 comments:

Post a Comment