Monday, 20 April 2015

விரைவில் மூடப்படுகிறது 'பிளிப்கார்ட்' வெப்சைட்!

அண்மையில், பிரபல ஷாப்பிங் வெப்சைட்டான 'மிந்த்ரா' மூடப்பட்டதையடுத்து ஆன்லைன் வர்த்தகத்தின் ஜாம்பவானாக திகழ்ந்து வரும் பிரபல 'பிளிப்கார்ட்' வெப்சைட்டும் இந்த ஆண்டுக்குள் மூடப்படுகிறது. தொடர்ந்து பிளிப்கார்ட் இணையதளத்தில் ஊகவணிகங்கள் அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிளிப்கார்ட் வெப்சைட்டின் துணை அதிபர் மைக்கேல் அதானி தெரிவித்துள்ளார். 

உலக அளவில் 3-வது மிகப்பெரிய ஷாப்பிங் சைட்டாக உள்ள பிளிப்கார்ட்டுக்கு 4 கோடிக்கு அதிகமான பதிவு செய்த வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். மொபைல் ஆப்ஸ் வழியாக இதுவரை 20 கோடிக்கும் அதிகமான பொருட்களை 30 ஆயிரம் வியாபாரிகள் மூலம் விற்பனை செய்திருக்கிறது பிளிப்கார்ட். இந்தியாவில் மட்டும் 24 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ள பிளிப்கார்ட்டில் ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் கிடைப்பதாக பொதுவான கருத்து நிலவி வருகிறது. 

இந்நிலையில், அதிகரித்து வரும் ஷாப்பிங் காரணமாக வெப்சைட்டில் டிராபிக் அதிகமாகி அடிக்கடி ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட 10 மடங்கு ஆன்லைன் டிராபிக் அதிகரித்துள்ளது. இந்த சவாலை சமாளிக்க மொபைல் ஆப்ஸ் வழியாக பிரத்யேக பிளாட்பார்மில் இனி வர்த்தகத்தை வழங்க முடிவு எடுத்துள்ளது. மாதத்திற்கு 8 கோடி ஆர்டர்களை வினியோகித்து வரும் பிளிப்கார்ட்டுக்கு 3-ல் 2 பங்கு ஆன்லைன் டிராபிக் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களிலிருந்து மட்டுமே வருகிறது. மிந்த்ராவின் மொபைல் ஆப்ஸ் வளர்ச்சி பிளிப்கார்டை விட அதிகமானது. கடந்த ஆண்டு மிந்த்ராவை ரூ.2 ஆயிரம் கோடிக்கு கையகப்படுத்திய பிளிப்கார்ட் வரும் மே 1-ந்தேதி முதல்  மொபைல் ஆப்ஸ் மூலமாக மட்டுமே வர்த்தகத்தை வழங்குகிறது. அதே பாணியை இனி பிளிப்கார்ட்டிலும் கடைபிடிக்க தயாராகிறது.

Related Posts:

  • Google smartens Android's voice search Google Inc has reportedly retrained voice search in Android in order to let users call family and friends by saying aloud their pet names. Callers can now call their loved ones on the basis of the relationship … Read More
  • விண்டோஸ் 7 காலம் நீட்டிப்பு இன்றைக்கு விண்டோஸ் 8 சிஸ்டம் அறிமுகப்படுத்தியவுடன், மைக்ரோசாப்ட் பழைய சிஸ்டங்களுடன் கம்ப்யூட்டர் வடிவமைப்பவர் களுக்கு, இறுதி நாளினை நிர்ணயம் செய்தது. அதற்குப் பின்னர், அந்நிறுவனங்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் தான், கம்ப்ய… Read More
  • Windows 8 விற்பனையில் சிகரத்தை எட்டியது மைக்ரோசொப்ட் மைக்ரோசொப்ட் நிறுவனம் மெட்ரோ பயனர் இடைமுகத்துடன் அறிமுகப்படுத்தியிருந்த Windows 8 இயங்குதளமானது தற்போது 200 மில்லியன் கொப்பிகள் விற்பனையாகியுள்ளன. விண்டோஸ் 7 இயங்குதள விற்பனையை விடவும் மந்தமான வேகத்திலேயே விற்பனை இடம்பெற்… Read More
  • இ மெயில் இயங்குவது இப்படித்தான்....! இன்றைக்கு ஒரு நிமிடத்தில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மெயில்கள் என்னும் மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. எதுவும் வழி தவறியதில்லை. அனுப்புபவர் சரியான முகவரி தராமல் இருந்தால் ஒழிய, செல்லும் பாதையில் தொடர்புகள் அறுந்து போய்… Read More
  • 56 வகை பாலினங்களை அறிமுகம் செய்கிறது பேஸ்புக்...! இன்றைக்கு நாம் அனைவரது நேரத்தையும் கணக்கில்லாமல் தின்று கொண்டு இருக்கிறது பேஸ்புக் என்னும் நேரத்தை தன் உணவாக சாப்பிடும் மெஷின். ஒரு நாளைக்கு பேஸ்புக் பார்க்காமல் நிச்சயம் நம்மால் இருக்க முடியாது எனலாம் அந்த அளவுக்கு இது நம… Read More

0 comments:

Post a Comment