Monday, 1 December 2014

வ.உ.சியும் அமெரிக்க உபெர் கால் டாக்சி சேவையும்.

சாதாரணமாக ஒரு கால் டாக்சி, ஆட்டோ ரிக்சா பிடித்து ஒரு இடத்திற்கு செல்வது இப்பொழுது மிகவும் எளிது. தடுக்கி விழுந்தா நம்மை தூக்கவோ , இடிக்கவோ ரோட்டில் ஆட்டோ அல்லது கால்டாக்சி கண்டிப்பாக இருக்கும்.
அமெரிக்காவில் இதுபோல் எண்ணற்ற கால்டாக்சி சேவை நிறுவனங்கள் உள்ளன. அவை அனைத்தையும் ஒரு ஐபோன் அப்ப்ளிகேசன் தூக்கி சாப்பிட்டுவிட்டது அதன் பெயர் தான் “உபெர்” (UBER)  வெகு விரைவாக புக் செய்த கால் டாக்ஸி உங்களை பிக்கப் பண்ண வரும் என்ற வாசகத்துடன் , தொழில்நுட்ப திறன்களுடன் இந்த அப் வெளியிடப்பட்டது. குறைந்த காலகட்டத்தில் சுமார் 50 நாடுகளில் கால் டாக்ஸி ஓட்டுனர்கள் உபெர் நிறுவனத்துடன் இணைந்து ஓட்டி வருகின்றனர்.
சமீபத்தில், இந்தியாவில் சென்னை உட்பட 11 நகரங்களில் தனது சேவையை துவங்கியுள்ள உபெர், இந்தியாவில் உள்ள தனது இருவகையான போட்டியாளர்களை சமாளிக்க பிரிட்டிஷ் கால தொழில் போட்டி முறையை கையாளுகிறது.

0 comments:

Post a Comment